மதுரை ஆக, 16
மதுரை, ராமநாதபுரம் மாவட்டங்களுக்கான மூன்று நாள் பயணம் மேற்கொள்கிறார் முதல்வர் ஸ்டாலின். மதுரையில் பிரபல பின்னணி பாடகர் டி எம் சௌந்தரராஜன் சிலை திறப்பு விழா, மண்டபம் மீனவர் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக இன்று மாலை மதுரை செல்கிறார். முதல்வர் ஸ்டாலின் வருகையை ஒட்டி மதுரை ராமநாதபுரத்தில் தென் மண்டல காவல் தலைமை இயக்குனர் நரேந்திரன் நாயர் தலைமையில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 18ம் தேதி முதல்வர் மீண்டும் சென்னை திருப்புகிறார்.