புதுடெல்லி ஆக, 6
நாட்டின் பல்வேறு முக்கிய நகரங்களில் உள்ள ரயில் நிலையங்களை மறு சீரமைக்கும் திட்டத்தை ரயில்வே அமைச்சகம் செயல்படுத்தி வருகிறது. இதன் ஒரு பகுதியாக அம்ரித் பாரத் ரயில் நிலையத்திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் 24,470 கோடி ரூபாயில் 508 ரயில் நிலையங்களை மேம்படுத்தும் பணிகளுக்கு பிரதமர் காணொளி வாயிலாக இன்று அடிக்கல் நாட்டுகிறார். அதில் தமிழ்நாட்டில் உள்ள 18 ரயில் நிலையங்கள் உள்ளடக்கம்.