புதுடெல்லி ஆக, 7
ரயில் நிலையங்கள் மறு கட்டமைப்பு என்ற பெயரில் பயண கட்டணத்தில் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்படாது என ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார். அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் 508 ரயில் நிலையங்களை மறு கட்டமைப்பு செய்வதற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். இது குறித்து ரயில்வே அமைச்சர் உலக தரத்திலான ரயில் நிலையங்கள் நிலையங்களை மக்கள் பயன்படுத்த வேண்டும் என்பது தங்கள் விருப்பம் என கூறினார்.