மதுரை ஆக, 7
சமீப ஆண்டுகளில் மிக வெப்பமான ஆகஸ்ட் மாதம் இந்த ஆண்டு பதிவாகி இருக்கிறது. கோடை முடிந்து இரண்டு மாதங்களுக்கு மேலாகியும் தமிழகத்தில் வெப்பம் குறையவில்லை. இடையில் சில நாட்கள் மழை பெய்த பிறகும் உச்சத்தை தொட்டு வருகிறது. நேற்று கூட மதுரையில் 41.7 டிகிரி வெப்பம் பதிவானது. ஆகஸ்ட் மாதத்திற்கு இது மிகவும் அதிகமாகும் இதனால் கவனமாக இருக்கும் படி வானிலை மையம் எச்சரித்து வருகிறது.