புதுடெல்லி ஆக, 7
மணிப்பூர் கலவரம் தொடர்பான வழக்கில் அம்மாநில காவல் தலைமை இயக்குனர் ராஜீவ் சிங் இன்று உச்ச நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக உள்ளார். ஏற்கனவே உச்சநீதிமன்றம் அவருக்கு இது தொடர்பான கண்டனங்களை தெரிவித்து இருக்கும் நிலையில், இன்று முக்கியமான ஆறு கேள்விகளுக்கு அவர் பதில் அளிக்க உள்ளார். கலவரத்தை தொடக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது போன்ற முக்கிய கேள்விகளை அவரிடம் உச்ச நீதிமன்றம் கேட்டுள்ளது.