சென்னை ஆக, 7
தமிழகத்தில் ஐஏஎஸ் ஐபிஎஸ் படிக்க விரும்பும் பட்டதாரிகளுக்கு தமிழக அரசு இலவச பயிற்சி அளிக்கிறது. அதோடு ரூ.7500 உதவித் தொகையும் வழங்கப்பட உள்ளது. நான் முதல்வன் திட்டத்தின் கீழ் நடைபெற உள்ள இந்த பயிற்சிக்கான தேர்வு செப்டம்பர் 10ம் தேதி நடைபெற உள்ளது. இதன் மூலம் தீர்வாகும் ஆயிரம் மாணவர்களுக்கு சென்னையில் 10 மாதங்கள் பயிற்சி நடைபெறும் அடுத்த ஆண்டு நடைபெறும் யுபிஎஸ்சி தேர்வில் பங்கு பெறலாம்.