கீழக்கரை ஆக, 7
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை செய்யது ஹமீதா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் நாட்டு நலப்பணி திட்டம் சார்பாக டாக்டர் A. P. J. அப்துல் கலாம் அவர்களின் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் முனைவர் ராஜ சேகர் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக கீழக்கரை ஹமீதியா ஆண்கள் மேல்நிலைப் பள்ளி முதல்வர் ஜவஹர் பாருக் கலந்து கொண்டு சிறப்பித்தார்.
இந்நிகழ்ச்சியில், சிறப்பு விருந்தினர் ஜவஹர் பாருக் பேசுகையில் 21 ம் நூற்றாண்டின் தலைசிறந்த விஞ்ஞானிகளில் ஒருவராக டாக்டர் A. P. J. அப்துல் கலாம் கருதப்படுகிறார். அதிலும் இந்தியாவின் 11வது ஜனாதிபதியாக பதவியேற்று நாட்டுக்கு சேவை செய்தார். ஒரு விஞ்ஞானியாகவும், ஜனாதிபதியாகவும் அவரது பங்களிப்பு ஒப்பிட முடியாதது என்பதால் அவர் நாட்டின் மிகவும் மதிப்புமிக்க நபராக இருந்தார் . அதுமட்டுமின்றி, இந்திய விண்வெளி ஆராய்ச்சியில் அவர் ஆற்றிய பங்களிப்பு குறிப்பிடத்தக்கது என மாணவ மாணவியரிடையே எடுத்துரைத்தார்.
இந்நிகழ்ச்சியில் அனைத்து நாட்டு நலப் பணித்திட்ட மாணவர்களும் கல்லூரி பேராசிரியர்களும் பங்கேற்றனர். ஏற்பாடுகளை நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர்கள் சுலைமான் மற்றும் சதாம் உசேன், முனிய சத்தியா ஆகியோர் ஏற்பாடு செய்தனர்.
ஜஹாங்கீர்/மாவட்ட நிருபர்.
கீழக்கரை.