நெல்லை ஆகஸ்ட், 18
நெல்லை சந்திப்பு முத்தாரம்மன் கோவிலில் ஆடி மாத கொடை விழா நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து அருகே உள்ள திருமண மண்டபத்தில் வைத்து பக்தர்களுக்கு மற்றும் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
இந்நிகழ்வை திருநெல்வேலி சட்டமன்ற உறுப்பினரும் பாஜக சட்டமன்ற கட்சி தலைவருமான நயினார் நாகேந்திரன் துவக்கி வைத்தார். இதைத் தொடர்ந்து செய்தியாளர்களுக்கு அவர் பேட்டியில், மாநில அரசு மத்திய அரசுடன் ஒருங்கிணைந்து செயல்பட்டால் மக்களுக்கு நன்மையாக இருக்கும் என்றும் மாநில அரசு மத்திய அரசோடு ஒன்றிணைந்து செயல்படாவிட்டால் வாக்களித்த மக்களுக்கு இழப்பாக அமையும் என்றார்.
மேலும் மதுரை பாஜக மாவட்ட தலைவராக இருந்த டாக்டர் சரவணனுக்கு திமுகவிலிருந்து அழுத்தம் கொடுக்கப்பட்டதா என்ற கேள்விக்கு பதில் அளித்த அவர்,
ஏற்கனவே டாக்டர் சரவணன் ஒரு மாத காலமாக திமுகவிற்கு செல்வதற்கான வாய்ப்புகள் இருப்பதாக செய்திகள் வந்து கொண்டிருந்தது. அமைச்சர் வாகனங்களில் தாக்குதல் நடந்த சம்பவத்தால் தான் டாக்டர் சரவணன் கட்சியை விட்டு வெளியேறினார் என்பதை காரணமாக சொல்ல முடியாது நயினார் நாகேந்திரன் திமுகவிற்கு செல்கிறார் என்று நான் அதிமுகவில் ஜெயலலிதா இருந்த காலம் தொட்டு சொல்லிவருகிறார்கள் எந்த எண்ணத்தில் நான் திமுகவிற்கு செல்கிறேன் என்று சொல்கிறார்கள் என தெரியவில்லை. கட்சி பாகுபாடின்றி அனைவரிடமும் பழகுபவன் நான் என்று கூறினார்.
இந்நிகழ்வில் கட்சித் தொண்டர்கள், பொது மக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.