திண்டுக்கல் ஆகஸ்ட், 18
பழனி அருகே தாழையூத்துவில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில், தமிழக அரசின் விலையில்லா சைக்கிள் வழங்கும் விழா நடைபெற்றது. இதற்கு பழனி வருவாய் மாவட்ட அலுவலர் சிவக்குமார் தலைமை தாங்கினார். மாவட்ட கல்வி அலுவலர் திருநாவுக்கரசு, பள்ளி தலைமை ஆசிரியர் நயினார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில், உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு, மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்களை வழங்கினார். அப்போது அவர் அளித்த உரையில், திமுக அரசு கல்விக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. இந்த நிதியாண்டில் கல்விக்கு மட்டும் ரூ.37 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அரசு பள்ளிகளில் உட்கட்டமைப்பை மேம்படுத்தி தரமான கல்வி வழங்குவதே அரசின் முக்கிய இலக்கு. அதற்கு ஏற்றாற்போல பல்வேறு திட்டங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு செய்து வருகிறது. இதனால் மாணவ மாணவியர்கள் கல்வியில் கவனம் செலுத்து படிக்க வேண்டும் எனக் கூறினார்.
இந்த விழாவில் மாவட்ட ஊராட்சிக்குழு துணைத்தலைவர் பொன்ராஜ், மாவட்ட நகர்மன்ற உறுப்பினர் கிருஷ்ணசாமி, தொப்பம்பட்டி மேற்கு ஒன்றிய செயலாளர், தலைமை பொதுக்குழு உறுப்பினர், தொப்பம்பட்டி மேற்கு ஒன்றிய துணை செயலாளர் லலிதா சற்குரு மற்றும் அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், மாணவ-மாணவிகள் பலர் கலந்துகொண்டனர்.