திண்டுக்கல் ஆகஸ்ட், 19
சுகாதாரத்துறை சார்பில், சாணார்பட்டி அருகே உள்ள வேம்பார்பட்டி அம்மா மண்டபத்தில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்ட மருத்துவ முகாம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட நகர் மன்ற உறுப்பினர் விஜயன் தலைமை தாங்கினார். சாணார்பட்டி ஒன்றிய குழு தலைவர் பழனியம்மாள் சுந்தரம், வேம்பார்பட்டி ஊராட்சி தலைவர் கந்தசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கோபால்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் பிரியா வரவேற்றார்.
இதில் சுகாதாரத்துறை துணை இயக்குனரின் நேர்முக உதவியாளர் வல்லவன், வேம்பார்பட்டி ஊராட்சி துணை தலைவர் சச்சிதானந்தம் ஆகியோர் கலந்து கொண்டனர். முகாமில் கொசவபட்டி வட்டார மருத்துவ அலுவலர் மோகன்ராஜ் தலைமையிலான மருத்துவ குழுவினர் பொதுமக்களுக்கு மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சை அளித்தனர். மேலும் ஸ்கேன், எக்ஸ்ரே, நவீன ரத்த பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. முகாமுக்கான ஏற்பாடுகளை சுகாதார ஆய்வாளர்கள் நல்லேந்திரன், அன்பரசு, வேம்பார்பட்டி ஊராட்சி செயலாளர் கென்னடி ஆகியோர் செய்திருந்தனர்.