புதுடெல்லி ஜூலை, 27
பண்டிகை தினத்தை ஒட்டி டெல்லியில் நான்கு நாட்கள் மது விற்பனைக்கு தடை விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி முஹரம் பண்டிகை, சுதந்திர தினம், கிருஷ்ண ஜெயந்தி மற்றும் மிலாடி நபி ஆகிய நான்கு நாட்கள் டெல்லியில் மது விற்பனைக்கு தடை விதிக்கப்படுவதாக டெல்லி அரசு அறிவித்துள்ளது.