கர்நாடகா ஜூலை, 26
இந்தியா முழுவதும் பல்வேறு இடங்களில் கன மழை தொட்டி கொட்டி தீர்த்து வரும் நிலையில் கர்நாடகா மற்றும் தெலுங்கானா மாநிலங்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் கொடுத்துள்ளது. இந்நிலையில் கனமழை எச்சரிக்கை எதிரொலியாக தெலுங்கானாவில் இன்று மற்றும் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. ஹைதராபாத் ரங்கா ரெட்டி, மேட்சல், விஹாராபாத் பகுதிகளில் கன மழை பெய்யக்கூடும்.