புதுச்சேரி ஜூலை, 25
கனமழை எச்சரிக்கையால் புதுச்சேரியின் மாகே பிராந்தியத்தில் உள்ள பள்ளி கல்லூரி உட்பட அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று கர்நாடகா மாநிலம் குடக மாவட்டத்திலும் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ள நிலையில் தமிழகத்திலும் அறிவிக்கப்படுமா என்று எதிர்பார்க்கப்படுகிறது.