மணிப்பூர் ஜூலை, 25
மணிப்பூர் விவகாரத்தில் பிரதமர் மோடி அறிக்கை அளிக்க வலியுறுத்தி இந்தியா கூட்டணியை சேர்ந்த எம்பிக்கள் போராட்டத்தை தொடங்கினர். இந்த போராட்டம் இரவு முழுவதும் நீடித்தது. கூட்டணி கட்சிகளை சேர்ந்த எம்பிக்கள் மாறி மாறி இந்த தொடர் போராட்டத்தில் பங்கேற்றனர். இடைநீக்கம் செய்யப்பட்ட சஞ்சய் சிங் இரவு முழுவதும் போராட்டத்தில் கலந்து கொண்டார். போராட்டம் இன்றும் தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.