புதுடெல்லி ஜூலை, 25
இந்தியா வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையிலான இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி டிராவில் முடிந்தது. இதனால் டெஸ்ட் தொடரை இந்தியா 1-0 என்ற கணத்தில் கைப்பற்றியது. மெகா இலக்கை நோக்கி இரண்டாவது இன்னிங்ஸ் செய் விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு பெருசோகம் மட்டுமே மிஞ்சியது. ஐந்தாவது மற்றும் கடைசி நாளான நேற்று ஆட்டம் தொடங்குவதற்கு முன்பே மழை புகுந்து விளையாடியது.