புதுடெல்லி ஜூலை, 25
நாட்டிலேயே அதிக கடன் வாங்கிய மாநிலங்களில் தமிழ்நாடு முதலிடத்தில் இருப்பதாக நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். மார்ச் மாதம் வரை தமிழ்நாடு வாங்கி இருக்கும் மொத்த கடன் 7 லட்சத்து 53 ஆயிரத்து 860 கோடியாகும். இதற்கு அடுத்த இடத்தில் உத்தரப்பிரதேசமும், மூன்றாவது இடத்தில் மகாராஷ்டிராவும் உள்ளன. கடன் வளர்ச்சிக்கானது என்று ஒரு தரப்பும், அதிக கடன் ஆபத்து என்று ஒரு தரப்பும் கூறி வருகின்றனர்.