புதுடெல்லி ஜூலை, 23
தென்னிந்திய உலகில் முன்னணி நடிகையாக திகழும் நடிகை சமந்தா பாலிவுட் படங்களிலும் நடித்து வருகிறார். இந்நிலையில் ஸ்டார்ஸ் இந்தியா நடத்திய ஆய்வில் நாட்டின் மிகவும் பிரபலமான பெண் நட்சத்திரங்களின் பட்டியலில் முதல் இடம் பிடித்துள்ளார் சமந்தா. இந்த ஆய்வு இந்தியா முழுவதும் மேற்கொள்ளப்பட்டது. ஜூன் மாதத்திற்கான ஆய்வறிக்கையை சமீபத்தில் வெளியிட்டது. இந்த செய்தியால் சமந்தா ரசிகர்கள் குஷியில் உள்ளனர்.