சென்னை ஜூலை, 19
இசையமைப்பாளரும் நடிகருமான ஜிவி பிரகாஷ் குமாரின் நூறாவது படம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது. சூரரைப் போற்று வெற்றி கூட்டணியான இயக்குனர் சுதா கொங்கரா நடிகர் சூர்யாவுடன் தற்போது ஜிவிபி மீண்டும் இணைய உள்ளதாக தகவல் அறிந்த சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இது குறித்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பு சூர்யாவின் பிறந்த நாளான ஜூலை 23 அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.