சென்னை ஜூலை, 18
தனது ரசிகர்களின் செயல்பாடுகள் அனைத்தும் நற்பணி மன்றம் மூலமாக ஒருங்கிணைக்கப்படும் என்று நடிகர் விஷ்ணு விஷால் அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், விஷ்ணு விஷால் நற்பணி மன்றம் மூலம் விளையாட்டு வீரர்களுக்கு உதவும் வகையில் ஒரு செயல் திட்டத்தை தீட்டி வருகிறோம். அந்த திட்டம் பற்றிய அறிவிப்பை விரைவில் கொண்டாட இருக்கிறோம் என தெரிவித்துக் கொள்கிறேன் நன்றி என குறிப்பிட்டுள்ளார்.