நெல்லை ஆகஸ்ட், 18
அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லாது என உயர்நீதிமன்ற தீர்ப்பு வழங்கியதை தொடர்ந்து தமிழகம் முழுவதும் ஓபிஎஸ். அணி நிர்வாகிகள் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாட்ட த்தில் ஈடுபட்டனர்.
நெல்லையில் மாநகர் மாவட்ட செயலாளர் தர்மலிங்கம், புறநகர் மாவட்ட செயலாளர் சிவலிங்கமுத்து ஆகியோர் தலைமையில் நிர்வாகிகள் கொக்கிரகுளத்தில் உள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
அதனைத் தொடர்ந்து பட்டாசு வெடித்தும், பொது மக்களுக்கு இனிப்பு வழங்கியும் கொண்டாடினர்.
இந்நிகழ்ச்சியில் ஜெயலலிதா பேரவை மாவட்ட அவை தலைவர் கணபதி சுந்தரம், பொருளாளர் நாராயணன், பொதுக்குழு உறுப்பினர் தமிழ்ச்செல்வி, நிர்வாகிகள் சிவ அருண், கந்தசாமி, கதிரேசன், செல்வ சித்ரா உள்பட பலர் கலந்து கொண்டனர்.