பாரீஸ் ஜூலை, 16
பாராலிம்பிக்ஸ் போட்டியில் பங்கேற்கும் இந்திய அணிக்கு தமிழகத்தை சேர்ந்த மாரியப்பன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் நடந்த பாரா தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் ஆண்களுக்கான உயரம் மட்டும் தாண்டும் பிரிவில் கலந்து கொண்ட மாரியப்பன் 1.80 மீட்டர் தாண்டி நான்காவது இடத்தை உறுதி செய்தார். பதக்கம் எதையும் பெறாத போதிலும் பாராலிம்பிக்ஸில் பங்கேற்கும் வாய்ப்பு பெற்றார்.