சென்னை ஜூலை, 14
சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று முதல்வர் தலைமையில் காலை 10:30 மணிக்கு திமுக பாராளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் நாடாளுமன்ற கூட்டத்தொடர் குறித்து விவாதிக்கப்படும் என கூறப்படுகிறது. நாடாளுமன்ற தேர்தலையொட்டி மழைக்கால கூட்டத்தொடர் முக்கியத்துவம் பெற்றுள்ளது. நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் வரும் 20ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 11ம் தேதி வரை நடைபெறுகிறது.