சென்னை ஜூலை, 11
முதலமைச்சர் மு.க ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில் 1,250 கிராமப்புற கோவில்களில் திருப்பணிகளை மேற்கொள்ள ரூ.50 கோடி ரூபாய் வழங்கினார். இந்து சமய அறநிலையத்துறை சார்பில் தேர்வு செய்யப்பட்டுள்ள 1,250 ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வசிக்கும் பகுதிகளில் உள்ள ஒவ்வொரு கோயில்களுக்கும் 2 லட்சம் ரூபாய் வீதம் கோயில்களின் நிர்வாகிகளிடம் திருப்பணிகள் மேற்கொள்ள வரைவோலைகள் வழங்கப்பட்டது.