சென்னை ஜூலை, 11
கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த 15 ராமேஸ்வர மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜிகே வாசன், ‘தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக மத்திய அரசு இலங்கை அரசுடன் பேசி நிரந்தர தீர்வு காண வேண்டும். தற்போது கைது செய்யப்பட்டுள்ள 15 மீனவர்களையும் விடுவிக்க வேண்டும்’ என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.