சென்னை ஜூலை, 11
காய்கறிகள், பயிர்கள், மசாலா பொருட்கள் ஆகியவை வடமாநிலங்களில் தமிழகத்திற்கு லாரிகள் மூலமே வருகிறது. மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், குஜராத், உத்தரப்பிரதேசம் உட்பட மாநிலங்களில் கன மழை காரணமாக தமிழகத்தை சேர்ந்த லாரிகளுக்கு சரிவர லோடு கிடைக்காமல் சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் டிரைவர் கிளீனர் சுமை தூக்குவோர் உள்ளிட்டவர்கள் போதிய வருமானம் இன்றி பாதிக்கப்பட்டுள்ளனர்.