பெங்களூரு ஜூலை, 11
சமீபத்தில், கர்நாடகாவில் தோட்டத்திலிருந்து 2 லட்சம் மதிப்புள்ள தக்காளி திருடு போனது. இந்நிலையில் பெங்களூருவில் சரக்கு வாகனத்துடன் தக்காளி திருடப்பட்ட சம்பவம் அரங்கேறி உள்ளது. விவசாயி ஒருவர் 2 டன் தக்காளியை மார்க்கெட்டுக்கு சரக்கு வாகனத்தில் எடுத்துச் சென்றார். அப்போது பெங்களூரு அருகே வாகனத்தை வழி மறித்த மர்ம நபர்கள் தக்காளியுடன் சரக்கு வாகனத்தை எடுத்து சென்றனர்.