புதுடெல்லி ஜூலை, 11
இஸ்ரோ முன்னாள் தலைவர் கஸ்தூரி ரங்கனுக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டு பெங்களூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இலங்கை கொழும்புவுக்கு விமானத்தில் சென்ற போது அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. உடனே தனி விமான மூலம் அவர் பெங்களூரு அழைத்துவரப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தற்போது அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.