புதுடெல்லி ஜூலை, 11
ஐம்பதாவது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் இன்று நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் டெல்லி விக்யான் பவனில் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடக்கவுள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது. மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட பின் நடைபெறும் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் என்பதால் வர்த்தக துறையின் கவனம் இதில் திரும்பி உள்ளது.