கோவா ஜூலை, 9
கோவாவின் மார்க்கோ நகரில் சுமார் 800 ஆண்டுகள் பழமையான கட்டிடம் அரசு சுகாதார மையமாக செயல்பட்டு வந்தது. நேற்று முன்தினம் இரவு இந்த கட்டிடத்தின் ஒரு பகுதி திடீரென இடிந்து விழுந்தது. இதில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. கனமழையின் காரணமாக இந்த கட்டிடம் இருந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த பழமையான கட்டிடம் போர்த்துகீசியர் காலத்தில் கட்டப்பட்டது.