சென்னை ஜூலை, 4
விறுவிறுப்பாக நடைபெற்று வந்த சந்திரமுகி 2 படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்தது. இதையடுத்து இப்படத்தின் டப்பிங் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. இந்நிலையில் லாரன்ஸ் தற்போது டப்பிங்கில் கலந்து கொண்ட புகைப்படங்கள் வைரலாகி வருகின்றது. பி.வாசு இயக்கும் இப்படத்தில் பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத்முக்கிய வேடத்தில் நடிப்பது குறிப்பிடத்தக்கது. இப்படம் விநாயகர் சதுர்த்திக்கு வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.