சென்னை ஜூலை, 4
திருப்பரங்குன்றம் மலையை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு அமைச்சர் சேகர்பாபுவுக்கு உள்ளதென இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் கூறியுள்ளார். இது தொடர்பாக பேசிய அவர் இடைக்காலத்தில் படையெடுப்பின் காரணமாக மேலே தர்கா உருவாக்கப்பட்டது. இது ஸ்ரீ கந்தர் மலையல்ல சிக்கந்தர் மலை என கூறி பதற்ற சூழலை சிலர் உருவாக்குகின்றனர். இந்த விவகாரத்தில் திமுக அரசு தனது மௌனத்தை கலைக்க வேண்டும் என்றார்.