சென்னை ஜூலை, 4
சென்னையில் பணியின் போது காவலர்கள் செல்போன் பயன்படுத்த தடைவிதித்து சென்னை காவல் ஆணையர் சந்தீப்ராய் ரத்தோர் உத்தரவிட்டுள்ளார் செல்போன் பயன்படுத்துவதால் கவன சிதறல் ஏற்பட்டு பணிகளில் தோய்வு ஏற்படுவதாகவும் எஸ்ஐக்கு கீழ் உள்ள காவலர்கள் கட்டாயம் செல்போன் பயன்படுத்தக் கூடாது என்றும், கோவில் திருவிழா, போராட்டம் போன்ற பாதுகாப்பு பணியில் இருக்கும் போது கட்டாயம் செல்போன் பயன்படுத்தக் கூடாது என்று கூறியுள்ளார்.