நெல்லை ஆகஸ்ட், 17
நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை சமாதான புரத்தில் உள்ள அம்பேத்கர் காலனியில் 300க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
மேலும் பழமை வாய்ந்த இந்த குடியிருப்பு சிதிலமடைந்து காணப்பட்டதால் அந்த குடியிருப்பு கட்டிடங்களை அகற்றி விட்டு புதிதாக கட்ட மாநகராட்சி சார்பில் முடிவு செய்யப்பட்டது. இதனால் அங்கு வசித்த வந்த பொதுமக்களை தற்காலிகமாக வேறு இடத்திற்கு தங்கி கொள்ள உத்தர விடப்பட்டது. இந்நிலையில் அங்கு பொதுமக்கள் தங்களுக்கு தற்காலிக குடியிருப்புகள் அமைத்து தர ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.
இதைத்தொடர்ந்து கடந்த சில நாட்களுக்கு முன்பு சட்ட மன்ற உறுப்பினர் அப்துல்வகாப் தலைமையில் பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அப்போது கட்டிட பணிகள் நடைபெறும் 3 ஆண்டுகள் தற்காலிகமாக வேறு இடத்தில் தங்கி கொள்ளவும் அதற்கான வாடகை வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் தமிழக மக்கள் முன்னேற்ற கழக மாநகர் மாவட்ட செயலாளர் துரைப்பாண்டியன் தலைமையில் 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் இன்று மாநகராட்சி அலுவலகம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்