ஒடிசா ஜூன், 19
ஒடிசாவின் பாலசோரில் ஏற்பட்ட ரயில் விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 292 ஆக உயர்ந்துள்ளது. இந்த விபத்தில் 1200க்கும் மேற்பட்டோர் காயமடைந்திருந்ததால் பலி எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே இருந்தது. தற்போது பாலசோரில் உள்ள மருத்துவ கல்லூரி மருத்துவமனைகள் சிகிச்சை பெற்று வந்த கொல்கத்தாவை சேர்ந்த பல்டு என்ற 24 வயது இளைஞர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து பலி எண்ணிக்கை 292 ஆக ஆனது.