மணிப்பூர் ஜூன், 18
மணிப்பூரில் ஏற்பட்டுள்ள கலவரத்தில் சிக்கி இதுவரை நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் மணிப்பூரில் பாஜகவை பதவி நீக்கம் செய்யும் நேரம் வந்துவிட்டதாக பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி கூறியுள்ளது பாஜகவினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.சட்டப்பிரிவு 356 பயன்படுத்தி மத்திய அரசின் ஆட்சியை கொண்டுவர வேண்டும் அமித் ஷாவை விளையாட்டு துறைக்கு அனுப்புங்கள் என விமர்சித்துள்ளார்.