சென்னை மே, 21
நயன்தாராவும் அவரது கணவர் விக்னேஷ் சிவனும் இணைந்து சென்னையில் ஒரு தியேட்டரை விலைக்கு வாங்கி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முன்பு பிரபல தியேட்டராக இருந்து பின்னர் மூடப்பட்ட அகஸ்தியா என்ற தியேட்டரை அவர்கள் வாங்கியதாக கூறப்படுகிறது. அந்த இடத்தில் புதிதாக மேலும் இரண்டு தியேட்டரை நயன்தாரா கட்ட உள்ளாராம். ஏற்கனவே தயாரிப்பாளராக இருந்து வரும் நயன்தாரா டீக்கடையிலும் முதலீடு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.