கர்நாடகா மே, 9
கர்நாடகாவில் நாளை 224 தொகுதிக்கான சட்டசபை தேர்தல் ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. தற்போது அங்கு பசவராஜ் பொம்மை தலைமையில் பாரதிய ஜனதா கட்சி ஆட்சி நடைபெற்று வரும் நிலையில், இம்முறை ஆட்சி மாற்றம் வர வாய்ப்பு உள்ளதாக பல கருத்துக்கணிப்புகளில் தெரியவந்துள்ளது. இதனால் சமீப கால தேர்தல்களில் வெற்றிகள் பெற்று வந்த பாரதிய ஜனதா கட்சி இந்த தேர்தலிலும் எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டது.