கீழக்கரை மே, 9
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகர் திமுக சார்பில் இரண்டாண்டு சாதனை பொதுக்கூட்டம் நேற்று (08.05.2023) முஸ்லிம்பஜாரில் நடைபெற்றது. நகர் செயலாளர் பஷீர் அகமது தலைமயில் நடைபெற்ற கூட்டத்தில் நகர்மன்ற தலைவர் செஹனாஸ் ஆபிதா முன்னிலை வகிக்க நகர்மன்ற உறுப்பினர் சுஐபு வரவேற்று பேசினார்.
ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் காதர்பாட்சா(எ)முத்துராமலிங்கம் விளக்கவுரையாற்றிய போது 500 கோடி ரூபாய் மதிப்பில் கீழக்கரை நகராட்சிக்கு அரசு மருத்துவமனை புதிய கட்டிடம் கட்டுதல்,குடிநீர்,ஆரம்ப சுகாதார நிலையம் கட்டி கொடுத்தல் என மூன்று விசயங்களை தனது சட்டமன்ற தேர்தல் வாக்குறுதி என நினைபடுத்தினார்.
மேலும் அடுத்து வரும் மூன்றாமாண்டு சாதனை கூட்டத்தின் போது கீழக்கரைக்கு பாதாள சாக்கடை திட்டம்,கழிவு நீர் திட்டம்,தூய்மை பணி முற்றிலுமாக நிறைவேற்றப்பட்டு விடுமென்றும் அதனையே மூன்றாமாண்டு சாதனை நிகழ்வாக உங்கள் முன்பு சொல்வேன் என்றும் கூறினார்.
இக்கூட்டத்தில் ராமநாதபுரம் நகர்மன்ற தலைவர் கார்மேகம்,கீழக்கரை நகர்மன்ற துணை தலைவர் வழக்கறிஞர் ஹமீது சுல்தான்,நகர்மன்ற உறுப்பினர் ஷர்ஃப்ராஸ் நவாஸ் மற்றும் நகர்மன்ற உறுப்பினர்கள்,திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்திற்கு கீழக்கரை சுற்று வட்டாரங்களில் இருந்து பெண்கள் வருகை தந்து கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கதாகும்.
ஜஹாங்கீர்/தாலுகா நிருபர்
கீழக்கரை.