சென்னை மே, 5
ஜாதி சான்றிதழ் சரிபார்க்கும் அதிகாரம் டிஎன்பிஎஸ்சிக்கு இல்லை என்று உயர் நீதிமன்றம் கூறி உள்ளது. 1996 ம் ஆண்டு குரூப் 4 இல் தேர்ச்சி பெற்ற ஜெயராணி ஜாதி சான்றிதழை ஒப்படைத்து இருந்தார். அதில் கணவர் பெயர் இருந்ததால் தந்தை பெயரில் இருக்கும் சான்றிதழை கேட்டது டிஎன்பிஎஸ்சி. இதனை எதிர்த்து ஜெயராணி தொடர்ந்து வழக்கில் டிஎன்பிஎஸ்சிக்கு சரி பார்க்கும் அதிகாரம் இல்லை என்றும் சான்றிதழை மாவட்ட குழுவுக்கு அனுப்புமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.