சென்னை ஏப்ரல், 29
சித்திரை திருவிழாவை முன்னிட்டு மதுரையில் ஆறு நாட்கள் டாஸ்மாக்கை மூட வேண்டும் என்று நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. மதுரை மாவட்ட பாஜக தலைவர் மகா சுசீந்திரன் இந்த மனுவை தாக்கல் செய்திருந்தார். இதனை விசாரித்த நீதிபதிகள் அரசு முடிவுகளில் நீதிமன்றம் தலையிடாது என்று கூறிவிட்டனர். இருப்பினும் இந்த மனுவை பரிசீலக்குமாறு ஆட்சியருக்கு உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.