புதுடெல்லி ஏப்ரல், 30
பிரதமர் மோடி இன்று நூறாவது மன் கி பாத் நிகழ்ச்சியில் உரையாற்றுகிறார். 2014 ம் ஆண்டு மோடி பிரதமராக பதவியேற்ற பின் அந்த ஆண்டு அக்டோபர் மூன்றாம் தேதி இந்நிகழ்ச்சி தொடங்கப்பட்டது. மாதம் தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 11 மணிக்கு அகில இந்திய வானொலி மூலம் நாட்டு மக்களிடையே உரையாற்றி வருகிறார். இதன் நூறாவது அத்தியாயத்தில் மோடி முக்கிய அறிவிப்பு ஏதும் வெளியிடுவாரா என பாரதிய ஜனதா கட்சியினர் ஆவலோடு காத்திருக்கின்றனர்.