புதுடெல்லி ஏப்ரல், 30
மத்திய அரசு ரூ.100 நாணயத்தை இன்று வெளியிட உள்ளது. AIR ல் ஒளிபரப்பாகி வரும் பிரதமர் மோடியின் மன் கீ பாத்தின் நூறாவது எபிசோடில் நிகழ்ச்சியின் நினைவாக இந்த நாணயத்தை அரசு வெளியிட திட்டமிட்டுள்ளது. அசோகத் தூணில் முத்திரை, தேவ நாகரியில் ஹிந்தியில் சத்தியமேவ ஜெயதே என பொறிக்கப்பட்டிருக்கும் 35 கிராம் எடை கொண்ட இந்த நாணயம் 50 சதவீதம் வெள்ளி உலோகம் இருக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.