சென்னை மே, 7
அங்கன்வாடி பணியாளர்களுக்கு 15 நாட்கள் கோடை விடுமுறையாக தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி மே 10 முதல் 24ம் தேதி வரை அவர்களுக்கு கோடை விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது. பள்ளிகளைப் போல் தங்களுக்கும் விடுமுறை அளிக்க வேண்டும் என கடந்த மாதத்தில், அங்கன்வாடி ஊழியர்கள் அரசுக்கு கோரிக்கை வைத்து போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில் தற்போது அரசு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.