பிரான்ஸ் மே, 6
தேசிய தின கொண்டாட்டத்தில் சிறப்பு விருந்தினராக பங்கேற்க பிரதமர் மோடி பிரான் செல்கிறார். இந்தியாவிற்கும், பிரான்சுக்கும் இடையேயான ராணுவ கூட்டின் 25 வது ஆண்டு இது ஆகும். இதை கௌரவிக்கிற விதத்தில் ஜூலை 14ம் தேதி பேஸ்ட்டில் தினம் என்ற பெயரில் கொண்டாடப்படுகிற பிரான்ஸ் நாட்டின் தேசிய தின கொண்டாட்டத்தில் பிரதமர் மோடியை சிறப்பு விருந்தினராக அழைத்து பிரான்ஸ் கௌரவப்படுத்துகிறது.