சென்னை மே, 5
பிக் பாஸ் ரசிகர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் செய்தி வெளியாகியுள்ளது. 2017ல் தமிழில் தொடங்கிய பிக் பாஸ் தொடரை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார். இதுவரை 6 சீசன்கள் முடிந்த நிலையில் ஏழாவது சீசன் விரைவில் தொடங்கும் என தெரிகிறது. வழக்கமாக ஜூன் மாதத்தில் தொடங்கும் பிக் பாஸ் கொரோனாவால் கடந்த ஆண்டு அக்டோபரில் தொடங்கியது.