சென்னை மே, 4
நடிகரும், இயக்குனருமான மனோபாலா மறைவுக்கு இயக்குனர் ஆர். கே செல்வமணி நேரில் அஞ்சலி செலுத்தினார். பின்னல் பேட்டியளித்த அவர் திரைத்துறைக்கு இது பெரிய இழப்பு. அவர் என்னுடைய சொந்த அண்ணன் போன்றவர். இருக்கும் இடம் எப்போதும் கலகலப்பாக இருக்கும். விவேக், மயில்சாமி, மனோபாலா என்று தொடர்ச்சியான மரணங்கள் வேதனை அளிக்கிறது என்று உருக்கமாக பேசினார். மனோபாலாவின் இறுதிச் சடங்கு இன்று நடைபெறுகிறது.