புதுச்சேரி மே, 6
புதுவையில் சினிமா படப்பிடிப்பு கட்டணத்தை குறைக்க வேண்டும் என்று தம்பி ராமையா வேண்டுகோள் விடுத்துள்ளார். தமிழ் திரைப்பட நடிகர் தம்பி ராமையா புதுச்சேரிக்கு வந்தார் அவர் முதலமைச்சர் ரங்கசாமியை சட்டசபையில் உள்ள அவரது அலுவலகத்தில் மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினார். அப்போது புதுவையில் சினிமா படப்பிடிப்பு கட்டணத்தை குறைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.