Spread the love

புதுச்சேரி மே, 3

புதுவை மாநில விடுதலை சிறுத்தைகள் கட்சியின் முதன்மை செயலாளர் தேவபொழிலன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

அம்பேத்கர் இருபாலரும் சமஅதிகாரம் கொண்ட வர்கள் என போராடினார். கவர்னர் தமிழிசை அரசியலமைப்பு சமத்துவ கோட்பாடுகளுக்கு எதிராக பெண்களை அடிமைத் தனத்திலிருந்து மீளாத வகையில் பூஜை பணிகளுக்கு வெள்ளிக்கிழமை அலுவலக நேரத்தில் 2 மணி நேர சலுகைக்கு பின் வரலாம் என கூறியுள்ளார்.

இது மனுஸ்மிருதி கோட்பாடுகளை மீண்டும் நிலைநாட்டும் செயலாகவும், அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிராகவும் உள்ளது. கவர்னர் மதவாத சிந்தனைகளை கைவிட்டு, பெண்களின் வளர்ச் சிக்கான திட்டங்களில் கவனம் செலுத்த வேண்டும்.

மேலும் பெண்கள் நலனில் அக்கறை காட்டுவது போன்ற கவர்னரின் ஏமாற்று வேலை புதுவையில் எடுபடாது. பெண்களுக்கு 2 மணி நேர சலுகையை கைவிட வேண்டும். இல்லாவிட்டால் மக்களை திரட்டி கவர்னர் மாளிகையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவோம் என அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *