புதுடெல்லி மே, 2
தமிழகம் குறித்து ஆளுநர் ரவி பெருமிதமாக பேசி உள்ளார். குஜராத் மற்றும் மராட்டிய மாநிலம் உருவான நாளுக்கான விழாவில் பங்கேற்று பேசிய ரவி, வந்தாரை வாழவைக்கும் தமிழ்நாடு என்பதற்கு உதாரணமாக தமிழகம் பல மாநில மக்களை வாழவைத்துக் கொண்டுள்ளது பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலம் தமிழ்நாடு என வடகிழக்கு மாநில மக்கள் நம்பிக்கை கொண்டுள்ளனர். இதனால் படிக்கவும், வேலைக்கும் தயக்கம் இன்றி குழந்தைகளையும் அனுப்புகின்றனர் என்றார்.