மகாராஷ்டிரா மே, 1
புனித ஸ்தலமான சீரடி சாய்பாபா கோவில் இன்று முதல் கால வரை இன்றி மூடப்பட இருப்பதாக கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. கோயிலுக்கு பாதுகாப்பு கொடுக்கும் பொறுப்பை CISF யிடம் கொடுக்க மகாராஷ்டிரா அரசு முடிவு செய்துள்ளது. மாநில அரசின் இந்த முடிவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த கோவில் நிர்வாகம் பிரச்சனைக்கு தீர்வு காணப்படும் வரை கோவில் அடைக்கப்படும் என அறிவித்துள்ளது.